UPDATED : ஜூலை 30, 2024 01:49 PM
ADDED : ஜூலை 30, 2024 01:26 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது. இது இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் ஆகும்.
வெண்கல பதக்கத்திற்கு நடந்த போட்டியில், இந்தியாவின் மனுபாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி தென் கொரியாவின் வோன்ஹோ லீ - யீ ஜென் ஜோடியை 16- 10 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது. மொத்தம் இரண்டு வெண்கல பதக்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 25வது இடத்தில் உள்ளது.
முதல் இந்தியர்
ஏற்கனவே, துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் மனுபாகர் வெண்கலம் வென்றிருந்தார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
பிரதமர் வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி: துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து பெருமைப்படுத்துகிறார்கள்! வெண்கலம் வென்ற மனுபாகர் - சரப்ஜோத் சிங் ஜோடிக்கு வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது. மனுவைப் பொறுத்தவரை, அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம், இது அவரது சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இருவரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.