ADDED : ஜூலை 05, 2025 02:50 AM

பியூன்ஸ் ஏர்ஸ்: ஐந்து நாடுகள் பயணத்திட்டத்தின் தொடர்ச்சியாக பிரதமர் மோடி இன்று அர்ஜென்டினா புறப்பட்டார்.
கானா, டிரினிடாட்- அண்டு டபேகோ குடியரசு, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு, ஒருவார அரசுமுறை பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். கானா நாட்டை அடுத்து, டிரினிடாட் அண்டு டபேகோ குடியரசுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார்.
அங்குள்ள போர்ட் ஆப் ஸ்பெயின் விமான நிலையத்தில் தரையிறங்கிய மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர் மற்றும் 38 அமைச்சர்களும், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தீவு நாடான டிரினிடாட் அண்டு டபேகோவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசினார்.
இதையடுத்து இன்று அர்ஜென்டினா புறப்பட்டு சென்றார். இன்று பியூனஸ் ஏர்ன்ஸ் விமான நிலையம் சென்றடைகிறார். இது மோடியின் இரண்டாவது அர்ஜனெ்டினா பயணம் என கூறப்படுகிறது. இதற்கு முன் 2018-ம் ஆண்டு அர்ஜென்டினா சென்றார். இன்று அர்ஜென்டினா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜாவிர் மெய்லியை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு, நட்புறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். முக்கிய தலைவர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.