ADDED : செப் 15, 2025 03:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேபாளத்தின் முதல் பெண் அட்டர்னி ஜெனரலாக, மூத்த வழக்கறிஞரான சபிதா பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவி வகிக்கும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக பதவியேற்ற பிரதமர் சுசீலா கார்கி பரிந்துரையின் பேரில், அந்நாட்டின் அதிபர் ராம்சந்திர பவுடேல் அவரை நியமித்துள்ளார். இப்பதவி நாட்டின் சட்டம் மற்றும் அரசியல் அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். சபிதா, அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன், தேசிய தகவல் ஆணையத்தின் ஆணையராக பணியாற்றியுள்ளார்.