அடிக்கிற வெயிலுக்கு 40 ஏ.சி...!பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய வீரர்களுக்கு குளுகுளு' வசதி
அடிக்கிற வெயிலுக்கு 40 ஏ.சி...!பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய வீரர்களுக்கு குளுகுளு' வசதி
ADDED : ஆக 03, 2024 11:08 AM

பாரிஸ்; பாரிசில் கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் வகையில் இந்திய வீரர்களுக்காக 40 ஏ.சி.க்களை விளையாட்டு அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளன. போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஒலிம்பிக் கிராமங்களில் தங்கி உள்ளனர். ஆனால் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை முன் எப்போதும் இல்லாத அளவு கடுமையாக மாறி இருக்கிறது.கடும் வெப்பத்தால் இந்திய தடகள வீரர்கள் அவதிப்படுகின்றனர். உரிய மாற்று ஏற்பாடுகள் அவசியம் என்ற கோரிக்கைகளும் வீரர்கள் தரப்பில் இருந்து எழுந்தன.
அறைகளில் ஏ.சி.,
ஒலிம்பிக் சங்கம், பிரான்ஸ் தூதரகம் ஆகியவற்றுடன் மத்திய விளையாட்டு அமைச்சகம் கலந்து ஆலோசித்து வீரர்களின் வசதிக்காக புதிய ஏற்பாட்டை செய்திருக்கிறது. அதன்படி, வீரர்களுக்கு 40 ஏ.சி.க்களை அனுப்பி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒலிம்பிக் கிராமங்களில் இந்திய தடகள வீரர்கள் தங்கி இருக்கும் அறைகளில் இந்த ஏ.சி.க்கள் பொருத்தப்பட உள்ளன.