sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

உலகின் முன்னணி பல்கலை பட்டியல் இதோ: 54 இந்திய பல்கலைகளுக்கு இடம்!

/

உலகின் முன்னணி பல்கலை பட்டியல் இதோ: 54 இந்திய பல்கலைகளுக்கு இடம்!

உலகின் முன்னணி பல்கலை பட்டியல் இதோ: 54 இந்திய பல்கலைகளுக்கு இடம்!

உலகின் முன்னணி பல்கலை பட்டியல் இதோ: 54 இந்திய பல்கலைகளுக்கு இடம்!

4


UPDATED : ஜூன் 19, 2025 02:16 PM

ADDED : ஜூன் 19, 2025 01:31 PM

Google News

4

UPDATED : ஜூன் 19, 2025 02:16 PM ADDED : ஜூன் 19, 2025 01:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவின் மாசூசுட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பிடித்துள்ளது. இந்தாண்டு, இந்தியாவை சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் லண்டனை சேர்ந்த குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (க்யூ.எஸ்) என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, 2026ம் ஆண்டிற்கான உலக பல்கலை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 500 பல்கலைக்கழகம் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

உலகின் முன்னணி பல்கலைகள் பட்டியல்!

1.மாசூசுட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,) அமெரிக்கா

2.இம்பீரியல் கல்லுாரி, பிரிட்டன்

3.ஸ்டேன்போர்டு பல்கலை, அமெரிக்கா

4.ஆக்ஸ்போர்டு பல்கலை, பிரிட்டன்

5.ஹார்வார்டு பல்கலை, அமெரிக்கா

6.கேம்பிரிட்ஜ் பல்கலை, பிரிட்டன்

7.இ.டி.எச்., ஜூரிச், சுவிட்சர்லாந்து

8.தேசிய பல்கலை, சிங்கப்பூர்

9.யு.சி.எல்., பிரிட்டன்

10.கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, அமெரிக்கா

11.ஹாங்காங் பல்கலை, ஹாங்காங்

12.நான்யாங் தொழில்நுட்ப பல்கலை, சிங்கப்பூர்

13.சிகாகோ பல்கலை, அமெரிக்கா

14.பீகிங் பல்கலை, சீனா

15.பென்சில்வேனியா பல்கலை, அமெரிக்கா

16.கார்னெல் பல்கலை, அமெரிக்கா

17.ஜிங்வா பல்கலை, சீனா

17.கலிபோர்னியா பல்கலை, பெர்க்கெலி, அமெரிக்கா

19.மெல்போர்ன் பல்கலை, ஆஸ்திரேலியா

20.நியூ சவுத் வேல்ஸ் பல்கலை, ஆஸ்திரேலியா

இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவின் 'டாப் 10' பல்கலைகள் பட்டியல்:

*ஐ.ஐ.டி., டில்லி- 123வது இடம்

* ஐ.ஐ.டி., பாம்பே- 129வது இடம்

* ஐ.ஐ.டி., மெட்ராஸ்- 180வது இடம்

* ஐ.ஐ.டி., கரக்பூர்- 215வது இடம்

* ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர்- 219வது இடம்

* ஐ.ஐ.டி., கான்பூர்-22வது இடம்

* டில்லி பல்கலைக்கழகம்- 328வது இடம்

* ஐ.ஐ.டி., குவாஹாட்டி- 334வது இடம்

* ஐ.ஐ.டி., ரூர்க்கி- 339வது இடம்

* அண்ணா பல்கலைக்கழகம்- 465வது இடம்



இது குறித்து சென்னை ஐ.ஐ.டி., சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: க்யூ.எஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2026ம் ஆண்டிற்கான உலக பல்கலை தரவரிசை பட்டியலில், 180வது இடத்திலும், இந்தியாவில் 3வது இடத்திலும் சென்னை ஐ.ஐ.டி., பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது.

உலகளவில் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வகுப்பறைகள் முதல் ஆய்வகங்கள் வரை, நமது சமூகத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

இந்த சாதனை, நமது முழு சமூகத்திற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் பெருமையான தருணம். அவர்களின் கூட்டு முயற்சிகள் நம்மை முன்னோக்கி கொண்டு செல்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பெருமிதம்!

இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கை: க்யூ.எஸ்., உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலில், 2014 இல் வெறும் 11 பல்கலைக்கழகங்கள் மட்டும் இடம் பெற்று இருந்தது.

தற்போது, 2026ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலில் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் அறிமுகப்படுத்த கல்வி சீர்திருத்தங்களின் பயனாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிய கல்வி கொள்கை கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கு, பதில் அளித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: வரும் காலங்களில் அதிகமான இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் உலக அளவில் சிறந்த சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய இளைஞர்களின் நலனுக்காக, ஆராய்ச்சி மற்றும் புதுமை படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கு எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us
      Arattai