ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
ADDED : ஜூன் 20, 2025 08:06 AM

வாஷிங்டன்: ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா, இல்லையா என்பது குறித்து 2 வாரங்களில் அதிபர் டிரம்ப் முடிவு செய்வார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: ஈரானுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம் என்ற கணிசமான வாய்ப்பு உள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா, இல்லையா என்பது குறித்து 2 வாரங்களில் அதிபர் டிரம்ப் முடிவு செய்வார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். வலிமையின் மூலம் அமைதியை உருவாக்கும் அதிபர். எனவே ராஜதந்திரத்திற்கான வாய்ப்பு இருந்தால் அதிபர் எப்போதும் அதை பயன்படுத்தி கொள்வார். ஆனால் அவர் பலத்தை பயன்படுத்த பயப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனையை குறி வைத்து, ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். அவர், 'டெஹ்ரானின் உள்ளவர்கள் கடும் விளைவுகளை சந்திப்பார்கள்'' என தெரிவித்தார்.