சிங்கப்பூர் அமைச்சரவையில் இடம் பெறும் தமிழர்கள் யார் யார்?
சிங்கப்பூர் அமைச்சரவையில் இடம் பெறும் தமிழர்கள் யார் யார்?
UPDATED : மே 22, 2025 06:37 PM
ADDED : மே 22, 2025 06:12 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புதிய அமைச்சரவையில் தமிழர்கள் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நாளை (மே 23) பொறுப்பு ஏற்கின்றனர்.
சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், மொத்தம் உள்ள 97 இடங்களில், ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. தற்போது, புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், மூத்த துணையமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோர் நாளை (மே 23) பதவியேற்பார்கள்.
அமைச்சரவையில் தமிழர்கள் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர் அதன் விவரம் பின்வருமாறு:
1. கே.சண்முகம்- உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. விவியன் பாலகிருஷ்ணன்- வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. இந்திராணி ராஜா- பிரதமர் அலுவலக அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. தென்கிழக்கு மாவட்டத்தின் மேயராக தினேஷ் வாசு தாஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
5. ஜனில் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
6.முரளி பிள்ளை- சட்ட மற்றும் போக்குவரத்து துறையின் மூத்த துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.