/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
நாசிக் நகரில் தமிழ் பெண் நடத்தும் பள்ளி ஆண்டு விழா
/
நாசிக் நகரில் தமிழ் பெண் நடத்தும் பள்ளி ஆண்டு விழா
நாசிக் நகரில் தமிழ் பெண் நடத்தும் பள்ளி ஆண்டு விழா
நாசிக் நகரில் தமிழ் பெண் நடத்தும் பள்ளி ஆண்டு விழா
மார் 18, 2025

நாசிக்கில் உள்ள க்ரிஷ் கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியின் ஆண்டு விழா மிகப் பிரமாண்டமான அளவில் நடைபெற்றது. இந்த மழலையர் பள்ளியில் ஆரம்ப நிலை கல்வி மற்றும் சமூக அக்கறை ஒழுக்கம் கட்டுப்பாடு நல் பழக்கவழக்கங்களை கல்வியோடு சேர்த்து பயிற்றுவிக்கப்படுகின்றனர் .விழாவினை நாசிக் தமிழ் சங்கத் தலைவர் பி. ராமமூர்த்தி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மிக பிரமிக்க வகையில் கவர்ந்துவிட்டது இந்திய தேசிய ராணுவம் பற்றிய அணிவகுப்பு சோசியல் மீடியாவின் மூலம் வரும் பிரச்சனைகளை பிரச்சனைகள் மற்றும் மரங்களை காப்பது பற்றிய நாடகம் மிகச் சிறப்பாகவும் வெகு நேர்த்தியாகவும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கலை நிகழ்ச்சிகளைப் பெற்றோர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர்.
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முதல்வர் திறம்பட செய்திருந்தனர். இப்பள்ளியின் மிகப் பெருமையான விஷயம் என்னவென்றால் பள்ளியின் முதல்வர் அருணா கண்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மராட்டி மொழி மற்றும் இந்தி, ஆங்கிலம் கற்றுக் கொண்டு இந்தப் பள்ளியை மிகச் சிறப்பாக நிர்வகித்து வருகின்றார் அவர்களின் கடின உழைப்பினால் இந்தப் பள்ளி நாசிக் நகரில் மிகவும் பேசும் பொருளாக மாறி உள்ளது அவர்களின் கடின உழைப்பு மற்றும் திறமையினால் 2016 ஆம் ஆண்டு நான்கு குழந்தைகளோடு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி இன்று சுமார் நூறு குழந்தைகள் உடன் பள்ளி மிகச் சிறப்பாக நடத்தி வருவது நாசிக் நகரில் ஒரு தன்னிகரில்லா இடத்தை நம் தமிழ் சகோதரி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பள்ளி உன்னதமான முறையில் வளர்ந்திட, உயர்ந்திட தினமலர் நாளிதழ் சார்பாக நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
- நமது செய்தியாளர் பா.ஸ்ரீதர்