
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாசிக் நகரில் நாசிக் தமிழ் ஃபெடரேஷன் சார்பில் இப்தார் விருந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாசிக் தமிழ்ச் சங்கத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் துவக்கி வைக்கப்பட்ட இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டது மிகச் சிறப்பு. இந்த இப்தார் விருந்தினை வெகு விமரிசியாக ஏற்பாடு செய்திருந்த சர்பராஸ் குழு மிகவும் பாராட்டுக்குரியது. இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஹேமா கண்ணன் தொகுத்து வழங்கினார்.
சர்வ மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்த இபதார் விருது பெருமைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய ஓர் நிகழ்ச்சி என்பதில் ஐயமில்லை
- நமது செய்தியாளர் பா.ஸ்ரீதர்