/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
நாசிக் மஹா சிவராத்திரி கொண்டாட்டங்கள்
/
நாசிக் மஹா சிவராத்திரி கொண்டாட்டங்கள்
பிப் 27, 2025

மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாசிக் நகரில் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்சவடியில் மகா தீப ஆர்த்தி மிகச் சிறப்பாக நடைபெற்றது. காசி கங்கையில் எப்படி நடைபெறுமோ அதைப்போலவே நாசிக்கிலும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அனைவரும் ஆர்த்தி கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.
நாசிக் நகர் முழுவதுமே வீதியெங்கும் சிவபெருமானின் படங்கள் மற்றும் பதாகைகள், அகோரிகள் வேடமிட்டும் மற்றும் பலர் சிவ வேடம் தரித்து உலா வந்தது பக்தியின் உச்சம்.
நாசிக் நகரம் முழுவதும் ஒரே வாக்கியம்' ஓம் நமச்சிவாய' என்று தான் ஒலித்தது. 'ஹர ஹர மகாதேவா' என்ற மந்திரம் தெருவெங்கும் காற்றாய் பரவியது மக்கள் பக்தி பரவசத்தில் மகிழ்ச்சி வெள்ளத்தில்
- நமது செய்தியாளர் பா.ஸ்ரீதர்