மலச்சிக்கலை சீராக்க உதவும் 5 உணவுகள்

19-ஜூன்-2025

மாறி வரும் உணவு முறை காரணமாக நாம் சந்திக்கும், உடல் ரீதியான பிரச்னைகளில் ஒன்று மலச்சிக்கல்.

19-ஜூன்-2025

உணவிலுள்ள சத்துகள் உடலால் உறிஞ்சப்பட்டு, மீதம் கழிவாக வெளியேறும். ஆனால் அப்படி நடக்காமல் அவை உடலில் தேங்குவதால், நச்சுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

19-ஜூன்-2025

எனவே, மலச்சிக்கலை தவிர்க்க உதவும் சில உணவுகள் இதோ...

19-ஜூன்-2025

இஞ்சி... கீழ் குடலிலுள்ள அழுத்தத்தை இது குறைக்கிறது. வெல்லத்துடன் இதை கலந்து உட்கொண்டால், வாதம், கபத்தைக் கூட போக்கும்; மலத்தை தளர்த்தும்.

19-ஜூன்-2025

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் இருந்து நச்சுகளை அகற்ற செய்யும்.

19-ஜூன்-2025

மெக்னீசியம், இரும்பு, நார்ச்சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் அத்திப்பழத்தில் நிறைந்துள்ளன. ஊறவைத்த 3 பழங்களை தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும்.

19-ஜூன்-2025

ஆரோக்கியமான மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த கருப்பு உலர் திராட்சைகளை (5- 6) இரவில் ஊற வைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் சாப்பிட குடல் இயக்கம் சீராகும்.

19-ஜூன்-2025

ஆரோக்கியமான குடலுக்கு, சிறுதானியங்களை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பாக மலச்சிக்கலுக்கு சிறு சோளம் அருமருந்தாக உள்ளது.

19-ஜூன்-2025