அமர்நாத் யாத்திரை துவங்கியது... ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

03-ஜூலை-2025

இந்த புனித அமர்நாத் பனிலிங்க குகை ஜம்மு காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்திலுள்ளது.

03-ஜூலை-2025

இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.

03-ஜூலை-2025

இந்தாண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை இன்று துவங்கியது.

03-ஜூலை-2025

புனித குகையை அடைய 2 பாதைகள் உள்ளன. இந்த யாத்திரையில் பங்கேற்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்துள்ளனர்.

03-ஜூலை-2025

பால்டால் மற்றும் பஹல்காமில் இருந்து பக்தர்கள் குழு ஒன்று, ஹர ஹர மகாதேவா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் புனித குகைக்குப் புறப்பட்டு சென்றனர்.

03-ஜூலை-2025

முதல் அணியில் சுமார் 4,500 பக்தர்கள் ஜம்முவிலிருந்து புறப்பட்டனர். விரைவில் அவர்கள் புனித அமர்நாத் குகைக்கு சென்று தரிசிப்பர்.

03-ஜூலை-2025

இந்தாண்டு 38 நாட்கள் நீடிக்கும் அமர்நாத் யாத்திரை, ஆகஸ்ட் 9 சனிக்கிழமை, சவான் பூர்ணிமா நாளில் நிறைவடையும்.

03-ஜூலை-2025

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாதுகாப்புக்காக 80 ஆயிரம் வீரர்கள் 24 மணி நேரமும் உஷார் நிலையில் உள்ளனர்.

03-ஜூலை-2025

அமர்நாத் யாத்திரைப் பாதையில் ஒவ்வொரு அடிக்கும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

03-ஜூலை-2025