அடிக்கடி காது குடைபவரா நீங்க?   
        
சிலருக்கு தினசரி காது குடைவது ஒருவித பழக்கம். இயற்கையாகவே காதை சுத்தப்படுத்தும் மெக்கானிசம் உள்ளது.
        
 காதில் உற்பத்தியாகும் மெழுகு உள்ளிருந்து வெளியே வருவது வரை இயல்பாக நடக்கும் விஷயம். 
        
தலைக்கு குளிக்கும் போது அதுவே சுத்தம் செய்து கொள்ளும். 
'பட்ஸ்' எனும் பஞ்சால் காதை சுத்தப்படுத்தும் போது அந்த இயல்பான விஷயம் 
தடுக்கப்படும். 
        
 காதின் உள்பகுதி வரை சுத்தப்படுத்த முடியாது. வெளிப்பகுதியை சுத்தம் செய்வதாக நினைத்து அழுக்கை உள்பகுதிக்கு தள்ளிவிடுவர். 
        
காது குடைவது தவறான ஒன்று. இதனால் காதின் உள்பகுதியில் உள்ள மெலிதான தோலில் காயம் ஏற்பட்டு தொற்று வரும்.
        
நீரிழிவு பாதிப்பு இருந்தால் காதில் பூஞ்சை தொற்று வரும் 
அபாயமுள்ளது. குளிக்கும் போது காதில் தண்ணீர் அடைத்திருந்தால் விரலால் 
துண்டை பிடித்து துடைத்தால் போதும்.
        
குழந்தைகளுக்கு 
உட்பகுதியில் காது சுத்தம் செய்வது கஷ்டம். காதுக்கான சொட்டு மருந்துகள் 
உள்ளன. அதை சில சொட்டுகள் ஊற்றினால் மெழுகு கரைந்து வெளியே வந்து விடும். 
        
 அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றலாம். பஞ்சால் சுத்தம் செய்தால் அழுக்கு சென்று காது அடைப்பது போல தோன்றும். பட்ஸ், ஹேர்பின், பென்சிலால் காதை குடையக்கூடாது.
        
ஒரு சிலருக்கு மட்டும் தான் காதில் அழுக்கு சேரும். 
கம்ப்யூட்டர் திரையில் பார்த்துக் கொண்டே டாக்டர்கள் அழுக்கை 
எடுத்துவிடுவர். அல்லது நீர் அடித்து காதை சுத்தம் செய்வர்.