இன்று தேசிய விளையாட்டு தினம்! 
        
இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த மேஜர்'தயான் சந்த்'தை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த தினம்  ஆக. 29ல் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. 
        
தயான் சந்த் 1905 ஆக. 29ல் உ.பி.,யில் பிறந்தார். 14வது வயதில் ஹாக்கி விளையாட துவங்கினார். ராணுவ ஹாக்கி அணியில் இடம்பெற்றார்.  
        
1928 முதல் 1964 வரையிலான காலகட்டத்தில் நடந்த 8 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி 7 போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றதில் இவருக்கும் பெரும் பங்கு உள்ளது. 
        
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது இவரது பெயரில்  தயான் சந்த் கேல் ரத்னா வழங்கப்படுகிறது. 
        
2012 ஆம் ஆண்டில், இந்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆகஸ்ட் 29 ஆம் தேதியை நாட்டின் தேசிய விளையாட்டு தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 
        
விளையாட்டு மீதான ஆர்வத்தை இளைஞர்களிடம் உருவாக்குவதே இதன் நோக்கம்.