உடல் எடையை குறைக்க காய்கறி ஜூஸ் குடிக்கலாமா?

உடல் எடை குறைப்பு முயற்சியில் இருக்கும் பலருக்கும் காய்கறி ஜூஸ் குடிக்கலாமா என பலத்த சந்தேகம் உள்ளது.

நல்லது என்பதற்காக அனைத்து காய்கறிகளிலும் ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது. ஒருசில காய்கறிகளில் மட்டும் முயற்சிக்கலாம்.

அப்படிப் பார்த்தால் வாழைத்தண்டும், வெள்ளைப் பூசணியும் ஜூஸ் செய்து குடிக்க ஏற்றவை. இவை இரண்டையும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றி மாற்றி எடுக்கலாம்.

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு ஜூஸில் சிறிது சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் கல் உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

இதேப்போல வெள்ளைப் பூசணியை ஜூஸ் செய்து குடிக்கலாம். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது. குடித்து முடித்த ஒரு மணி நேரத்துக்கு வேறெதுவும் சாப்பிடக்கூடாது.

நெல்லிக்காய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்த ஜூஸும் குடிக்கலாம்.

இந்த மூன்று ஜூஸ்களை குடித்துப் பார்த்து உடல் ஏற்றுக்கொள்கிறதா என கவனித்து, பின்னர் தொடரலாம்.

அதேவேளையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்களையும் சரிவர பின்பற்றினால் உடல் எடைகுறைப்பு முயற்சி வெற்றியைத் தரும்.