மக்கள் தொகை கணக்கெடுப்பு... 16 மொழிகளில் சுய விபரங்களை ஆன்லைனில் பதியலாம் !

19-மே-2026

நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2011ல், கணக்கெடுப்பு பணிகள் நடந்தன.

19-மே-2026

பின், 2021ல், கொரோனா தொற்று பரவல் காரணமாக தடைபட்ட நிலையில், 2027ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமென மத்திய அரசு அறிவித்தது.

19-மே-2026

இது, வீட்டு கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என, 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல்கட்டமாக, வீடுகள் கணக்கெடுப்பு பணிகள், வரும் ஆக., 1 - 31ம் தேதி வரை நடக்கிறது.

19-மே-2026

அதற்கு முன், ஜூலை 17 - 31ம் தேதி வரை, பொது மக்கள் அனைவரும், 'ஆன்லைன்' வழியே சுய விபரங்களை பதிவு செய்யலாம்.

19-மே-2026

இந்த வீடுகள் கணக்கெடுப்பு பணியின்போது, மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும்.

19-மே-2026

பொது மக்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உட்பட 16 மொழிகளில், தங்களுக்கு விருப்பமான மொழிகளில், சுய விபரங்களை பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

19-மே-2026

சுய விபரங்களை பதிவு செய்யும்போது, முதலில் பதிவு செய்யும் மொழி; குடும்பத் தலைவரின் பெயர்; தொலைபேசி எண்; ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

19-மே-2026

ஒரு முறை பதிவு செய்த பின், அவற்றை மாற்ற இயலாது. சேகரிக்கப்படும் தனிமனித விபரங்கள், முறையாக பாதுகாக்கப்படும்.

19-மே-2026