வெள்ளரிப் பிஞ்சு பாயசம்... ரொம்ப ஈஸிதாங்க!

29-ஜூன்-2024

தேவையான பொருட்கள்: வெள்ளரிப் பிஞ்சு - 1, சர்க்கரை - 150 கிராம், அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன், பசும்பால் - 250 மி.லி.,

29-ஜூன்-2024

பாதாம் பவுடர், நெய், ஏலக்காய் பொடி, முந்திரி, தண்ணீர் - தேவையான அளவு.

29-ஜூன்-2024

அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன், துருவிய வெள்ளரியை நெய்யில் வதக்கி, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

29-ஜூன்-2024

அதில், அரிசி மாவு, பாதாம் பவுடர் கலக்கவும். பின், சர்க்கரை, ஏலக்காய்த்துாள் சேர்த்து, கொதிக்க விடவும்.

29-ஜூன்-2024

அதனுடன், காய்ச்சி ஆறிய பால், நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.

29-ஜூன்-2024

இப்போது சுவையான 'வெள்ளரிப் பிஞ்சு பாயசம்' ரெடி. அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.

29-ஜூன்-2024