காஹ்மர்... இந்தியாவின் ராணுவ கிராமம் இது!

உ.பி., யில் காஜிபூர் மாவட்டத்திலுள்ள காஹ்மர், அதிக ராணுவ வீரர்கள் உள்ள கிராமம் என அழைக்கப்படுகிறது.

கங்கை ஆற்றை ஓட்டியுள்ள இங்கு 2011 சென்சஸ் படி, 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

இங்குள்ள இளைஞர்கள், பல தலைமுறையாக ராணுவத்தில் சேர்கின்றனர்.

ராணுவ வீரர் இல்லாத குடும்பமே இல்லை எனும் அளவுக்கு, குறைந்தது வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் உள்ளார்.

தற்போது சுமார் 5 ஆயிரம் பேர் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், இளைஞர்களுக்கு இதற்கான பயிற்சியை வழங்குகின்றனர்.

நாட்டின் மற்ற பகுதிக்கு வழிகாட்டியாக இக்கிராமம் திகழ்கிறது.