ஜிப்லி போட்டோக்களால் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம்: போலீசார் எச்சரிக்கை

10-ஏப்-2025

ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் தங்களது படங்களை ஜிப்லி போட்டோவாக மாற்றும் விதம் இணையவாசிகளிடையே தற்போது டிரெண்டாக உள்ளது.

10-ஏப்-2025

இந்நிலையில் ஜிப்லி ஆர்வலர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன் விபரத்தை பார்ப்போம்.

10-ஏப்-2025

ஜிப்லி கலையை சுற்றியுள்ள சாத்தியமான ஆபத்துகளை பயனர்கள் குறைத்து மதிப்பிட கூடாது.

10-ஏப்-2025

பயனர்கள் தனிப்பட்ட பயோமெட்ரிக் தரவை ஏ.ஐ., செயலிகளிடம் வழங்குகிறார்கள். சமர்ப்பிக்கப்பட்ட தரவை பயனர்கள் எளிதில் நீக்க முடியாது என்பது கவலைக்குரிய விஷயம்.

10-ஏப்-2025

ஜிப்லி போட்டோக்களால் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

10-ஏப்-2025

அங்கீகரிக்கப்படாத ஆப்கள், இணையதளங்களுக்கு புகைப்படங்களை வழங்கும் போது தவறான செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது.

10-ஏப்-2025

பயோமெட்ரிக் தகவல்களை வைத்து விஷமிகள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை கூட திருட முடியும்.

10-ஏப்-2025

இந்த தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

10-ஏப்-2025