ஹெல்த்தியான மணத்தக்காளி கீரை சூப்!

18-ஏப்-2026

மணத்தக்காளி கீரை - அரை கட்டு, சின்ன வெங்காயம் - 5, பூண்டு - 3 பல்.

18-ஏப்-2026

தேங்காய் பால் - 1 கப், எண்ணெய், மிளகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

18-ஏப்-2026

சுத்தம் செய்த மணத்தக்காளி கீரை, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

18-ஏப்-2026

குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, கீரையை சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

18-ஏப்-2026

பின், இந்த சாறில், மிளகுத்துாள், தேங்காய் பால் சேர்த்தால் ஆரோக்கியமான மணத்தக்காளி சூப் ரெடி.

18-ஏப்-2026

இது, வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரின் உடல் நலத்துக்கும் உகந்தது.

18-ஏப்-2026