முதியோர்கள் நிம்மதியாக துாங்க இதோ டிப்ஸ்

28-டிச-2024

வயது முதிரும் போது, இரவில் துாக்கம் குறையும். திடீரென படுக்கையிலிருந்து எழுந்தால் தடுமாற்றம் ஏற்படும்; உடலும், மனமும் பாதிக்கப்படும்.

28-டிச-2024

இதை தவிர்க்க, இரவில் படுக்கைக்கு செல்லும் முன், திரவ உணவுகள் எடுக்க வேண்டாம்.

28-டிச-2024

முதிய வயதில் பகல் வெளிச்சத்தில் இருக்க நேர்ந்தால், உடலில் 'மெலடோனின்' அதிகளவில் சுரக்கும். இது, துாங்குவதற்கு துாண்டும். ஆனால், பகலில், 30 நிமிடம் மட்டும் துாங்கினால் போதும்.

28-டிச-2024

இரவில் படுக்கைக்கு செல்லும் முன், உடலை ஓய்வாக வைத்திருக்க வேண்டும்.

28-டிச-2024

இதமான வெந்நீரில் குளிக்கலாம். எளிய யோகாசனம் செய்யலாம். இரவு, 7:00 மணிக்குள் மிதமான உடற்பயிற்சி செய்யலாம். நடைப்பயிற்சியும், தோட்ட வேலையும் செய்வது சிறப்பு.

28-டிச-2024

அலைபேசி, லேப்டாப் போன்ற தொடர்பு சாதனங்களை தள்ளி வைக்க வேண்டும்.

28-டிச-2024

முதுமை பருவத்தில், நாளொன்றுக்கு, ஐந்து மணி நேர துாக்கம் போதுமானது. ஆனால், தொந்தரவற்ற ஆழ்ந்த துாக்கம் அவசியம்.

28-டிச-2024