தினமும் ஒருவேளைக்கு ரா டயட் எடுப்பது நல்லதா?

04-ஏப்-2026

சமைக்காத உணவில் அவற்றின் இயற்கை சத்துகள், என்சைம்கள் பாதுகாக்கப்படுகின்றன.

04-ஏப்-2026

எனவே, தினமும் ஒருவேளையாவது சமைக்காத உணவை (ரா டயட்) சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள்.

04-ஏப்-2026

ஆப்பிள், வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி போன்ற பழங்கள், கேரட், வெள்ளரி, தக்காளி, பீட்ரூட், முட்டைகோஸ், கீரை, லெட்யூஸ் காய்கறிகள்...

04-ஏப்-2026

முளைகட்டிய பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, பாதாம், வால்நட், நிலக்கடலை, சூரியகாந்தி விதைகள், ஆளிவிதைகள், தேங்காய், இளநீரை நேரடி உணவாக சாப்பிடலாம்.

04-ஏப்-2026

இவற்றை சமைக்கவோ, பதப்படுத்தவோ தேவையில்லை.

04-ஏப்-2026

இது உடலுக்கு உயிர்சக்தி அளித்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. உடலின் 'அல்கலைன் சமநிலையை பராமரித்து ஜீரண அமைப்புக்கு ஓய்வு அளிக்கிறது.

04-ஏப்-2026

உணவுகளை சமைக்கும் போது அதிலுள்ள விட்டமின் சி, போலேட் சத்துகள் குறையும்.

04-ஏப்-2026

இது உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதுடன், கல்லீரல், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

04-ஏப்-2026

மேலும் குறைந்த கலோரி, சாப்பிட்டவுடன் திருப்தி காரணமாக உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் சரும ஆரோக்கியமும், உடல் சக்தியும் மேம்படுகிறது.

04-ஏப்-2026

ஜீரணசக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றே 'ரா டயட்' முறைக்கு மாற வேண்டும் என்பது இயற்கை மருத்துவர்களின் அட்வைஸாகும்.

04-ஏப்-2026