இன்று உலக காற்று தினம்

15-ஜூன்-2026

அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ காற்று அவசியம். காற்றுமாசை தடுக்க வலியுறுத்தி ஜூன் 15ல் உலக காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது.

15-ஜூன்-2026

அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகனங்கள், ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களின் பயன்பாட்டால் காற்று மாசுபடுகிறது. இதனால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

15-ஜூன்-2026

மனிதன் உணவு இல்லாமல் கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது.

15-ஜூன்-2026

மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் காற்று மிகவும் அவசியமானதாகும்.

15-ஜூன்-2026

காற்றானது, தாவரத்தின் விதைகளை சிதறடிப்பதன் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதோடு, பூமியின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது.

15-ஜூன்-2026

புவி வெப்பமடைதல் பிரச்சினையை உலகம் சந்திக்கும் இந்த வேளையில், காற்றைப் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை உபயோகிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

15-ஜூன்-2026

'காற்று ஆற்றல்: லட்சியத்தில் இருந்து வேகமான செயல்பாட்டிற்கு' என்பது இந்த ஆண்டிற்கான மையக்கருத்து.

15-ஜூன்-2026