இன்று உலக இசை தினம்

21-ஜூன்-2026

உலக இசை தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி, உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

21-ஜூன்-2026

இசையின் மகத்துவத்தை பறைசாற்றவும், மக்களை இசையின் மூலம் ஒன்றிணைக்கவும், இந்த நாள் உருவாக்கப்பட்டது.

21-ஜூன்-2026

மொழி, கலாசாரம் ஆகியவற்றை கடந்து உணர்வுகளை வெளிப்படுத்தும், உலகளாவிய மொழியாக விளங்குகிறது, இசை.

21-ஜூன்-2026

உலக இசை தினம், முதன்முதலில் 1982ல், பிரான்ஸ் நாட்டில் துவங்கப்பட்டது.

21-ஜூன்-2026

உலக இசை தினத்தன்று, உலகின் பல நகரங்களில், பலவிதமான இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

21-ஜூன்-2026

இவை, தெரு இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், இசைக் கருவி கண்காட்சிகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் என, பல வடிவங்களில் அமைகின்றன.

21-ஜூன்-2026

இந்நாளில், தொழில்முறை இசைக் கலைஞர்கள் முதல், அமெச்சூர் இசை ஆர்வலர்கள் வரை, அனைவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு பெறுகின்றனர்.

21-ஜூன்-2026

இசை என்பது, மனிதர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகும். இது மகிழ்ச்சி, துக்கம், அமைதி மற்றும் உற்சாகம் போன்ற உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

21-ஜூன்-2026