இன்று உலக வானிலை தினம்!

23-மார்-2026

வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன.

23-மார்-2026

இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில விஷயங்களே.

23-மார்-2026

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலை தினம்' ( World Meteorological Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

23-மார்-2026

அந்தத் தினத்தில், மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன.

23-மார்-2026

வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்ப மயமாதல், பனி உருகுதல், கடல் மட்டம் உயர்தல், ஓசோன் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் முக்கியமானவை.

23-மார்-2026

1950ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலைக் கழகம்' தோற்றுவிக்கப்பட்டது. இதில் 189 உறுப்பு நாடுகள் உள்ளன.

23-மார்-2026

இந்த வருடத்திற்கான மையப் பொருள்: 'இன்று உற்றுநோக்கி, நாளைய தினத்தைப் பாதுகாப்போம்'.

23-மார்-2026