ஓட்ஸ் லட்டு செய்வோமா ?

22-ஜூன்-2026

ஓட்ஸ் - 1 கப், நெய் - 2 டீஸ்பூன், வெல்லம் - கால் கப், பாதாம் - 5, முந்திரி - 5.

22-ஜூன்-2026

கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானவுடன், ஓட்ஸ் சேர்த்து ஐந்து நிமிடம் லேசாக வறுத்து, தனியாக வைக்கவும்.

22-ஜூன்-2026

அதேப்போல, பாதாம், முந்திரியை லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

22-ஜூன்-2026

பின், அதே கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன், அதில் வெல்லம் சேர்க்கவும்.

22-ஜூன்-2026

பாகு பதத்திற்கு வந்தவுடன், அதில் வறுத்து வைத்த ஓட்ஸ் சேர்க்கவும்.

22-ஜூன்-2026

லட்டு உருண்டை பிடிக்கும் பதத்துக்கு கலவை வரும் வரை நன்றாக கிளறவும். இதில், வறுத்த பாதாம், முந்திரியை போட்டு கிளறவும்.

22-ஜூன்-2026

பின், உள்ளங்கைகளில் நெய் தடவி, லட்டு உருண்டைகளை பிடிக்கவும். அவ்வளவு தான் இப்போது ஓட்ஸ் லட்டு ரெடி.

22-ஜூன்-2026