தரமான காற்று... தமிழக நகருக்கு முதலிடம்

16-ஜன-2025

கடந்த சில ஆண்டுகளாக டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்றின் தரம் அதிக மாசடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

16-ஜன-2025

இந்நிலையில், நாடு முழுவதுமுள்ள அதிகம் பாதித்த மற்றும் தரமுள்ள காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியல் கடந்த வாரம் வெளியானது.

16-ஜன-2025

அதில், தரமுள்ள காற்று இருக்கும் நகரமாக தமிழகத்தைச் சேர்ந்த நெல்லை விளங்குகிறது.

16-ஜன-2025

டாப் 10 இடங்களில் நெல்லை (தமிழகம்) - 1, நஹர்லாகன் (அருணாசல பிரதேசம்) - 2, மடிக்கேரி (கர்நாடகா) - 3, விஜயபுரா (கர்நாடகா) - 4, தஞ்சை (தமிழகம்) - 5 ஆகிய நகரங்கள் உள்ளன.

16-ஜன-2025

அடுத்தடுத்த இடங்களில் கோப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரபிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் உள்ளன.

16-ஜன-2025

அதேபோல, காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் டில்லி முதலிடத்தில் உள்ளது.

16-ஜன-2025

அடுத்தடுத்த இடங்களில் காஷியாபாத், பைரனிஹாட், சண்டிகர், ஹபூர், தனபாத், பாடி, கிரேட்டர் நொய்டா, குஞ்சேமுரா, நொய்டா ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

16-ஜன-2025