கையில் உள்ள நகங்கள் மட்டும் வேகமாக வளர்வது ஏன்?

14-மே-2025

பொதுவாக கால் நகங்கள் வேகமாக வளர்வதில்லை. கால் நகங்களை விட கை நகங்கள் வளரும் வேகம் மூன்று மடங்கு அதிகம்.

14-மே-2025

கை நகங்கள் வளர இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, இதயத்துக்கு மிகக் குறைந்த தூரத்தில் கை நகங்கள் இருக்கின்றன.

14-மே-2025

இதனால் அவற்றிற்கு ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் தாராளமாகக் கிடைக்கின்றன.

14-மே-2025

இரண்டாவது, கால்களை நாம் பயன்படுத்துவதை விட, கைகளை அதிகம் பயன்படுத்துகிறோம். இதுவும் கைவிரல் நகங்களின் வேக வளர்ச்சிக்குக் காரணமாம்.

14-மே-2025

மாதத்தில் 2.5 மில்லி மீட்டர் அளவுக்கு நம் கை நகங்கள் வளர்கின்றன.

14-மே-2025

வெட்டாமலேயே விட்டால், ஒரு மனிதரின் சராசரி ஆயுள் காலத்தில், அவரது நக நீளம் இரண்டாள் உயரத்தையும் தாண்டக்கூடும் என கூறப்படுகிறது.

14-மே-2025