அமிலத்தை அதிகரிக்கும் மன அழுத்தம்

10-மார்-2025

இளம் வயதினரிடம் அதிகமாக காணப்படும் பிரச்னை, மன அழுத்தம் தான்.

10-மார்-2025

வேலைப் பளு, குடும்ப பொறுப்பு, இவை அனைத்தையும் விட கம்ப்யூட்டர், போன் ஸ்கிரீன் பார்க்கும் நேரம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

10-மார்-2025

இதனால் சரியான, போதுமான துாக்கம் இல்லை. அப்போது, முதலில் பாதிக்கப்படுவது வயிறு. வயிற்றில் நிறைய அமிலம் சுரக்கும்.

10-மார்-2025

இது அல்சர், வாயுத் தொல்லை, அமிலம் மேலேறுதல் என்று பல பிரச்னைகளுக்கு வழி செய்யும். மன அழுத்தமும் இருந்தால், சாதாரணமாக சுரக்கும் அமிலத்தை விட அதிகளவில் சுரக்கும்.

10-மார்-2025

எனவே, என்ன பிரச்னை இருந்தாலும், வயிறு நலனை மனதில் வைத்து, தற்காலிகமாகவாவது பிரச்னைகளை மறந்து, குறைந்தது 6 மணி நேரம் துாங்க வேண்டும்.

10-மார்-2025

ஆழ்ந்த துாக்கம் இருந்தாலே உடம்பிலுள்ள 90 சதவீத பிரச்னைகள் சரியாகிவிடும்.

10-மார்-2025

உடற்பயிற்சி இருந்தால், அட்ரினலின் சுரப்பது குறைந்து, உடம்பு, மனதிலுள்ள அழுத்தம் குறைந்து விடும்; துாக்கமும் நன்றாக வரும். எனவே, தினமும் அரைமணி நேரத்துக்கு நடைப்பயிற்சி அவசியம்.

10-மார்-2025