குளிர்கால உணவுகள்... சுக்கு துளசி காபி

தேவையானப் பொருட்கள்: தனியா - ஒரு கப், சுக்குத்துாள் - அரை கப், மிளகு - கால் கப், ஏலக்காய் - 10, துளசி இலைகள் - 5.

வெறும் கடாயில் தனியா, மிளகு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும்.

சூடு ஆறியவுடன், சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். இதுவே, சுக்கு காபி துாள்.

ஒரு கப் தண்ணீருடன் சிறிதளவு பனங்கற்கண்டு, சுக்கு காபி பவுடர் மற்றும் துளசி இலைகள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி, தேவையான சூட்டில் அருந்தலாம்.

இனிப்பு சுவைக்காக பனங்கற்கண்டுக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டியும் சேர்க்கலாம்.