கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகளை களைவது எப்படி?

கணவன் மனைவி இடையே பிரிவை உண்டாக்கும் சில விஷயங்களைப் பற்றியும் அவற்றை எவ்வாறு களைவது என தெரிந்துகொள்வோம்.

என் உணர்வை போல தான், அவள் (அவர்) உணர்வும், அதற்கு மதிப்பும், முக்கியத்துவமும் தருவேன்... என்கிற முடிவிற்கு இருவரும் வர வேண்டும்.

இருவரும் நல்ல மூடில் இருக்கும் போது, 'ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றவர் அமைதியாக வேண்டும்...' என்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் பேசிக் கொள்ளுங்கள்.

ஒருவருடைய ஸ்மார்ட்போனை மற்றவர் சந்தேகக் கண் கொண்டு நோட்டமிடுவது பலரது திருமண வாழ்க்கை முறிய வழிவகுக்கிறது. இதனை தம்பதிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வீட்டின் பொருளாதாரப் பிரச்னைகளை இரவு படுக்கையறைக்குக் கொண்டுவருவது ஆபத்தானது. இதுபோன்ற விஷயங்களைப் பகலில் பேசுவது நல்லது.

தவறு நேரும்போது மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது. அதே நேரம் சுயமரியாதையை முழுமையாக இழக்கக்கூடாது.

கணவன், மனைவி ஆகிய இருவரும் பிறர் முன்னிலையில் ஒருவரை மற்றொருவர் இழிவாகப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.

இருவரும் தங்களுக்கென ஹாபி, நட்பு வட்டத்தை வைத்துக்கொள்ள வேண்டும். தன்னையும் தாண்டி பல உறவுகளுடன் பழக வேண்டி இருக்கும் என்பதை இருவரும் உணரவேண்டும்.

பிறரது வாழ்க்கையுடன் நமது வாழ்க்கையை ஒப்பிட்டு அங்கலாய்ப்பது பிரிவை உண்டாக்கும். உலகில் ஒவ்வொருவரது வாழ்க்கையும் வெவ்வேறானது, எனவே தம்பதிகள் ஒப்பீட்டை அறவே தவிர்ப்பது நல்லது.