ஹீட் ஸ்ட்ரோக்கில்  இருந்து பாதுகாத்துக்கொள்ள சில டிப்ஸ்…  
        
நமது உடலானது முக்கால் பாகம் நீரினால் ஆனது. எப்போது அது  60 சதவீதத்திற்கு கீழ் குறையுமோ  ஹீட் ஸ்ட்ரோக் எளிதில்  தாக்கும்.  
        
அதனால் கண்டிப்பாக கோடைக் காலத்தில் உங்கள் உடலை  நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  
        
தினமும் தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் முறையான நீரேற்றத்தை பராமரிக்க முடியும். வெளியே செல்லும் போதும் பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்லவும். 
        
அலுவலகம், வெளியே போகும்  போது மெலிதான மற்றும் தளர்வான காட்டன் ஆடைகளை அணிய வேண்டும் . 
        
மேலும் அதிக சூரிய ஒளியில் செல்வதை தவிர்க்கலாம்.  அதுவும்  12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்லுவதை தவிர்க்க வேண்டும்.   
        
வெளியே செல்லும் போதும் தொப்பி,  ஸ்கேர்ப் அணியலாம். அல்லது குடைப் பயன்படுத்தலாம்.  
        
தினசரி உணவில் நீர்ச் சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளவும். 
        
வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் போது  கைக்குட்டையை நீரில் நனைத்து முகத்தை அவ்வப்போது துடைத்துக் கொள்ளலாம். இதனால் உடல் சூடு சற்று தணியும்.