சுற்றுலா செல்லும் முதியோர்களுக்கு... சில டிப்ஸ்...

09-மே-2025

காரில் செல்வதைத் தவிர்த்து, ரயிலில் பயணம் செய்யுங்கள். அதுவே அவர்களுக்கு பாதுகாப்பானது.

09-மே-2025

நீங்கள் செல்லக் கூடிய ஊரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை, 'லிஸ்ட்' எடுத்துக் கொள்ளுங்கள்.

09-மே-2025

அதில், எந்த இடத்துக்குச் செல்லலாம் என்பது போன்ற தகவல்களை குறித்து வைத்து, அதற்கான நேரத்தையும் ஒதுக்கி, உங்கள் வசதிக்கேற்ப முதியோர்களை அழைத்துச் செல்லுங்கள்.

09-மே-2025

மலை வாசஸ்தலங்களுக்கு செல்வதைத் தவிர்க்கலாம். எந்த மாதிரியான சீதோஷ்ண நிலை, அவர்களின் உடல் நலத்துக்கு ஆகாது என்பதை அறிந்து, அந்த இடங்களைத் தவிர்த்து விடுங்கள்

09-மே-2025

முதியோரில் பலர், தொடர்ந்து மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வர். அவற்றை மறக்காமல் பயணத்தின் போது எடுத்துச் செல்லுங்கள்.

09-மே-2025

குடும்ப மருத்துவரின் தொடர்பு எண்ணை வைத்திருங்கள். இது, அவசர காலத்தில் ஆலோசனை கேட்க உதவும்.

09-மே-2025

வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில், அதிக வெளிச்சத்தால் வயதானவர்களின் கண்கள் கூசும். உடலில் நீர்ச்சத்து குறையக் கூடும். அதில் கவனமாக இருக்கவும்.

09-மே-2025

பழக்கப்படாத இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லும் போதும், படிகளில் ஏறி இறங்கும் போதும் கூடுதல் கவனம் தேவை.

09-மே-2025