வரும் 26 முதல் ரயில் கட்டணம் உயர்வு!

22-டிச-2025

'விரைவு ரயில்களில், 215 கி.மீ., துாரத்துக்கு மேல், 'ஸ்லீப்பர், ஏசி' வகுப்பில், சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

22-டிச-2025

இந்த புதிய கட்டண உயர்வு, வரும் 26 முதல் அமலுக்கு வரும்' என, ரயில்வே அறிவித்துள்ளது.

22-டிச-2025

ரயில்வேயில் நாடு முழுதும் உள்ள 19 மண்டலங்களில், 12,617 பயணியர் ரயில்கள், 11,700க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

22-டிச-2025

தினமும், 2.40 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில்வேயின் சராசரி வருவாயில், சரக்கு பிரிவில் மட்டும் 70 சதவீதம் வரை கிடைக்கிறது.

22-டிச-2025

புதிய ரயில் பாதை, கூடுதல் பாதைகள் அமைப்பது, ரயில் நிலையங்கள் மேம்பாடு, பயணியர் பாதுகாப்பை உறுதிப்படுத்த'கவச்' தொழில்நுட்பம் அறிமுகம் போன்ற திட்டங்களை ரயில்வே செயல்படுத்தி வருகிறது.

22-டிச-2025

215 கி.மீ., துாரத்துக்கு மேல் செல்வோருக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது, சாதாரண வகுப்பில் 215 கி.மீ., வரை பயணம் செய்வோருக்கு கட்டண உயர்வு இல்லை.

22-டிச-2025

அதற்கு மேல் பயணம் செய்தால், கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயரும்.

22-டிச-2025

அதேபோல, மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு, கி.மீ.,க்கு 2 பைசா உயர்த்தப்பட உள்ளது.

22-டிச-2025

இந்த கட்டண உயர்வால், ரயில்வேக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

22-டிச-2025