உஷார்... ஸ்மார்ட் வாட்ச் ஸ்ட்ராப்களால் வரும் ஆபத்து

26-டிச-2024

தற்போது பிரபலமாகவுள்ள ஸ்மார்ட் வாட்ச், தினமும் எவ்வளவு துாரம் நடக்கிறோம், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு என்ன போன்ற விபரங்களை கண்காணிக்கிறது.

26-டிச-2024

ஆனால் இந்த வாட்ச்சை அணிய பயன்படுத்தும் பட்டைகளால் (ஸ்ட்ராப்) உடல்நல கோளாறுகள் ஏற்படும் என சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

26-டிச-2024

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியானா பல்கலை, 22 வெவ்வேறு கடிகார நிறுவனங்களின் ஸ்ட்ராப்பை சோதித்ததில், 9 தயாரிப்புகளில் ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

26-டிச-2024

சாதாரணமாக அழகு சாதன பொருட்களில் பயன்படும் நிரந்தர வேதிகளின் அளவை விட, இவற்றில் நான்கிலிருந்து எட்டு மடங்கு அதிகமாக இருந்தன.

26-டிச-2024

பி.எப்.ஏ.எஸ்., (Poly fluoro alkyl substances - PFAS) என்பவை, பல்வேறு துறைகளில் பயன்படக்கூடிய ஒரு வேதிப் பொருள்.

26-டிச-2024

தண்ணீர், எண்ணெய் ஆகியவை ஒட்டாது என்பதால், துணிகள், குடை ஆகிய பொருட்கள் மீது பூச்சாகப் பயன்படுகிறது. இது சாதாரணமாக மட்காது.

26-டிச-2024

இவற்றை நிரந்தர வேதிகள் (Forever chemicals) என்பர். இவை நம் உடலுக்குள் ஊடுருவினால், நீரிழிவு முதல் புற்று நோய் வரை ஏற்படும்.

26-டிச-2024

நாம் நம் தோலை ஒட்டி அணிகிற கடிகார ஸ்ட்ராப்பிலிருந்து, இந்த ஆபத்தான வேதிப்பொருட்கள் உடலுக்குள் நுழைகின்றன.

26-டிச-2024

இதனால், கைக்கடிகாரம் வாங்கும் போது, ஸ்ட்ராப்பிலுள்ள வேதிப்பொருட்கள் என்னென்ன என தெரிந்து அணிவது நல்லது என்று எச்சரித்துள்ளனர் டாக்டர்கள்.

26-டிச-2024