இரவு 6 மணிக்குள் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?
டயட் என்ற ஒன்றை பின் பற்றினால், இதைத் தான் சாப்பிட வேண்டும் என்ற அழுத்தம் வந்து விடுகிறது.
உணவை எதிர்பார்த்து சாப்பிடாமல் இருந்தால் தான், 'அசிடிட்டி' உட்பட அனைத்து பிரச்னைகளும் வரும்.
வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வந்தால், உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்.
அதற்காக இரவு உணவை 6:00 மணிக்குள் சாப்பிட வேண்டும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர்.
கொழுப்பை எரிக்கும் தன்மை சிறுதானியங்களில் உள்ளது. காலை உணவாக அளவோடு அரிசி சாதம் சாப்பிட்டு, மாலை உணவாக சிறுதானியங்கள் சாப்பிடலாம்.
மாலை 6:00 மணிக்கு மேல் சாப்பிடுவது, அனைத்தும் கூடுதல் கலோரியாக உடலில் சேமிக்கப்படும்.
மேலும் உங்களின் உடல் எடை அதிகரிக்க செய்யும். அதன்பின் குறைப்பது சிரமம் எனவும் கூறப்படுகிறது.
சில மாதங்கள் என்று இல்லாமல், வாழ்க்கை முறையாக எப்போதும் பின்பற்றினால், உடல் பருமனை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.