sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

 சைக்கிளிங் குறித்து விழிப்புணர்வு 'ஹூப்பள்ளி கிளப்'பில் சாதனை

/

 சைக்கிளிங் குறித்து விழிப்புணர்வு 'ஹூப்பள்ளி கிளப்'பில் சாதனை

 சைக்கிளிங் குறித்து விழிப்புணர்வு 'ஹூப்பள்ளி கிளப்'பில் சாதனை

 சைக்கிளிங் குறித்து விழிப்புணர்வு 'ஹூப்பள்ளி கிளப்'பில் சாதனை


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

சைக்கிளிங் செய்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. தற்போது நகரங்கள், கிராமங்களில் சைக்கிளிங் போட்டிகள் நடப்பது வழக்கம். ஹூப்பள்ளி - தார்வாடில், இதற்காகவே ஒரு அமைப்பு செயல்படுகிறது. ஆண்டு தோறும் சைக்கிளிங் ரைடிங் நடத்தப்படுகிறது.

ஹூப்பள்ளி - தார்வாடில், 2016 ஜூன் 1ம் தேதியன்று, 'ஹூப்பள்ளி பைசைக்கிள் கிளப்' துவங்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பில், 130 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

அவர்களில், பத்து பேர் பெண்கள். அத்துடன், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், வக்கீல்கள் உட்பட, பல தரப்பினரும் உள்ளனர்.

அமைப்பின் தலைவர் ஷெட்டப்பா பிரங்கி கூறியதாவது:

எங்கள் அமைப்பில் உள்ள பலர், தினமும் காலை, மாலையில் சைக்கிளிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மாதந்தோறும் முதல் ஞாயிறு அன்று, சைக்கிள் ரைடிங் நடக்கிறது.

எத்தனை மணிக்கு ரைடிங் துவங்கும், எந்தெந்த பாதையில் செல்ல வேண்டும், யார், யார் பங்கேற்பர் என்பது குறித்து, வாட்ஸாப் குருப்பில் தகவல் பகிர்ந் து கொள்வர்.

ரைடிங் நாளன்று அதிகாலை, 4:00 அல்லது 5:00 மணிக்கு, அமைப்பின் உறுப்பினர்கள் சைக்கிள் மிதிக்க துவங்குவர். ஹூப்பள்ளியின் தோளனகெரே, வித்யாநகரின் பி.வி.பி., இன்ஜினியரிங் கல்லுாரி அல்லது குசுகல் சாலையின், கேஷ்வாபுரா சதுக்கத்தில் இருந்து சைக்கிளிங் ஆரம்பமாகும். பல்வேறு சாலைகளில், 50 கி.மீ., தொலைவு வரை செல்வர்.

யார் வேண்டுமானாலும், சைக்கிளிங் கிளப்பில் சேரலாம். கியர் உள்ள சைக்கிள், ஹெல்மெட் இருப்பது அவசியம். புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு, சில நாட்கள் வரை, 15 கி.மீ., சைக்கிள் ரைடிங் பயிற்சி அளிக்கப்படும்.

அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். சைக்கிள் ரைடிங் செய்யும் போது, மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கற்பிக்கப்படும். அதன்பின், சைக்கிள் ரைடிங் கில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும்.

இதுதவிர, சைக்கிளிங் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. 2017ல் எங்களின் அமைப்பு சார்பில், மலைப்பகுதிகளில் சைக்கிளிங் ரைடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆண்டு தோறும் தொலை துாரம் சைக்கிள் ரைடிங் நடத்தப்படுகிறது. 2023ல் டில்லியில் இருந்து வாகா பார்டர் வரை நடந்த சைக்கிளிங் ரைடிங்கில் எட்டு பேர் பங்கேற்றனர்.

கடந்த, 2024ல் டில்லியில் இருந்து ஸ்ரீநகர் லால்சவுக் வரை நடந்த ரைடில், 23 உறுப்பினர்கள், 2025ல் தார்வாடில் இருந்து தனுஷ்கோடி வரை நடந்த ரைடில், 40 உறுப்பினர்கள், 2026ல் மும்பையில் இருந்து கோவா வரை நடந்த ரைடில் 23 பேர் பங்கேற்றனர்.

நடப்பாண்டு ஏப்ரல் 9ல், ஹூப்பள்ளியில் இருந்து கன்னியாகுமரி வரை, 1,000 கி.மீ., துாரம் சைக்கிளிங் ரைடிங் நடத்தப்படும். எங்கள் கிளப்பின் உறுப்பினர்கள் சிலர், வெளி நாடுகளில் நடந்த, சைக்ளிங் போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar