உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 18, 2026 10:31 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: மஹாராஜா டிராபி கிரிக்கெட் தொடருக்கான, குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணியின் கேப்டனாக மணிஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் திறமையை வெளி கொண்டு வரும் வகையில், மஹாராஜா டிராபி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான தொடர் நாளை துவங்குகிறது. குல்பர்கா மிஸ்டிக்ஸ், கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ், ஹூப்பள்ளி டைகர்ஸ், மைசூரு வாரியர்ஸ், கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு, ஷிவமொக்கா யோதாஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
இதில், குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணி கேப்டனாக, இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே நியமிக்கப்பட்டு உள்ளார். முதல் போட்டியில் குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணி மைசூரு வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
