Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/ஆடுகளம்/ மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி முகாம்

 மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி முகாம்

 மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி முகாம்


ADDED : ஏப் 10, 2026 04:08 AM

Follow on Google

ADDED : ஏப் 10, 2026 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

மாநில இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில், மாணவர்களுக்கு இலவச கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. இந்த முகாம் வரும், 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக, விளையாட்டு துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

ஆண்டுதோறும் கோடை விடுமுறை நாட்களில், சிறார்களுக்காக விளையாட்டு பயிற்சி முகாம் நடப்பது வழக்கம். அதேபோன்று, இம்முறையும் விளையாட்டு பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பளு துாக்குவது உட்பட, பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஏற்கனவே பயிற்சி துவங்கியுள்ளது; வரும், 27ம் தேதி வரை நடக்கும். தட்சிணகன்னட மாவட்டம், மங்களூரின் யு.எஸ்.மல்லையா உள் விளையாட்டு அரங்கத்தில், தினமும் காலை, 6:30 முதல், 8:30 மணி வரை, மாலை, 4:30 முதல் இரவு 7:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.

சரஸ்வதி புத்திரன் பயிற்சி அளிக்கிறார். அதேபோன்று மங்களூரின், மங்களா விளையாட்டு அரங்கில், நவீன் கவுடா பயிற்சி அளிக்கிறார்.

இங்கும் காலை, 6:30 முதல், 8:30 மணி வரை, மாலை 4:30 முதல், இரவு 7:30 மணி வரை பயிற்சி நடக்கும். விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.

ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சியாளர் சரஸ்வதி புத்திரனை, 70191 44302 என்ற எண்ணிலும், நவீன் கவுடாவை 84948 30078 என்ற எண்ணிலும், தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap