தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/அழகு/இப்போ டிரெண்ட்... பிளப்பி நேச்சுரல் புரோஸ்

இப்போ டிரெண்ட்... பிளப்பி நேச்சுரல் புரோஸ்

இப்போ டிரெண்ட்... பிளப்பி நேச்சுரல் புரோஸ்


ADDED : செப் 13, 2026 08:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 08:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புருவங்களை அடர்த்தியாகவும், நேச்சுர லாகவும் காட்டும் 'பிளப்பி நேச்சுரல் புரோஸ்' (Fluffy Natural Brows) ஸ்டைலுக்கு எளிதில் மாறலாம்.

எப்படி என விளக்குகிறார், அழகு கலை நிபுணர் ஐஸ்வர்யா...

டெய்லி மேக்கப் போடும்போது, ஐப்ரோ பென்சில் கொண்டு புருவங்களை ரொம்ப திக்காவும், கருகருன்னும் வரையறதை கண்டிப்பா தவிர்க்கணும்.

முடிகளில் இடைவெளி அதிகமா இருந்தால் மட்டும், புருவ நிறத்துக்கேற்ற ஐப்ரோ பென்சில் அல்லது பவுடர் வச்சு லைட்டா பில் பண்ணலாம்.

புருவ முடிகள் லைட்டா மேல்நோக்கி தூக்குன மாதிரி இருந்தா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். அதுக்கு 'கிளியர்' அல்லது லேசான 'டின்ட்' இருக்கற ஐப்ரோ ஜெல்லை (Eyebrow Gel) யூஸ் பண்ணலாம். இது புருவங்களை நல்லா அடர்த்தியாவும், நேச்சுரலாவும் காட்டும்.

முக்கியமா, புருவத்தோட ஸ்டார்ட்டிங்ல அதிகமா பென்சில் கலர் அடிக்காம, நடுப்பகுதியிலும் கடைசியிலும் மட்டும் தேவையான அளவு கலர் கொடுத்தா தோற்றம் ரொம்ப நேச்சுரலா இருக்கும்.

தினமும் மேக்கப் போடும்போது, ஸ்கின் டோனுக்கு ஏத்த ஐப்ரோ நிறத்தை தேர்ந்தெடுப்பது ரொம்பவே முக்கியம். அடர்கருப்பு நிறத்தை பயன்படுத்தினா முகம் பார்க்க அவ்ளோ நல்லா இருக்காது. அதனால மிருதுவான கோடுகளோட, புருவத்தோட நேச்சுரல் ஷேப்பை அப்படியே பாலோ பண்றதுதான் பெஸ்ட்.

அப்புறம், புருவங்களை அளவுக்கு அதிகமா 'த்ரெடிங்' பண்றது அதோட நேச்சுரல் அடர்த்தியைக் குறைச்சுடும்.

அதனால தேவையான அளவு மட்டும் ட்ரிம் பண்ணிட்டு, இந்த நேச்சுரலான 'Fluffy Brows' லுக்கை மெயின்டெயின் பண்ணுங்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us