ADDED : செப் 12, 2026 06:04 PM

விநாயகர் சதுர்த்தி என்றாலே நினைவுக்கு வருவது கொழுக்கட்டை தான். இதை அரிசி மாவை வைத்து செய்வர். மோதகம், முக்கோணம், அரை வட்டம், உருண்டை, நீளம்...இப்படி பல வடிவங்களில் இந்த காலத்து அம்மாக்கள் கொழுக்கட்டை செய்கின்றனர்.
இனிப்பு கொழுக்கட்டை
அரிசி மாவை வெந்நீரில் பிசைந்து, அதில் தேங்காய், வெல்லம் , ஏலக்காய் சேர்த்து தயாரித்த பூரணத்தை உள்ளே வைத்து, சிறு உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.
பால் கொழுக்கட்டை
அரிசி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதை ஆவியில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பால், கரும்பு சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து, பின்பு வேக வைத்த உருண்டைகளை இந்த பாலில் சேர்த்து சிறிது நேரம் வேக வைத்தால் சுவையான பால் கொழுக்கட்டை ரெடி.
கார கொழுக்கட்டை
ஒரு சூடான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி உப்பு, கடுகு, உளுந்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து வேக வைக்க வேண்டும். 15 நிமிடத்துக்கு பின் மூடியை திறந்தால் தயாராக இருக்கும் ஆவி பறக்கும் கார கொழுக்கட்டை.
பலாப்பழக் கொழுக்கட்டை
அரிசி மாவில் சுடுதண்ணீர் சேர்த்து பிசைந்து அதன் நடுவே, பழுத்த பலாப்பழம், வெல்லம், ஏலக்காய், தேங்காய் கலந்த பூரணத்தை வைத்து வேக வைத்தால் அதுவே பலாப்பழக் கொழுக்கட்டை.
அம்மணி கொழுக்கட்டை
அரிசி மாவில் சிறிய உருண்டைகளை செய்து அதை வேகவைத்து, பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், கடலை பருப்பு, உப்பு, சிறிது மிளகாய் தூள் , பெருங்காய தூள் சேர்த்து வதக்கி, பின் உருண்டைகளை அதில் போட வேண்டும்.
