தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/தேங்காய் பால் தக்காளி சாதம்

தேங்காய் பால் தக்காளி சாதம்

தேங்காய் பால் தக்காளி சாதம்


UPDATED : ஜூலை 26, 2026 11:52 AM

ADDED : ஜூலை 17, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 11:52 AM ADDED : ஜூலை 17, 2026 07:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

அரிசி - 1/2 கிலோ

தக்காளி - 1/2 கிலோ

பச்சை மிளகாய் - 4

சின்ன வெங்காயம் - 1/2 கப்

கொத்தமல்லி இலை - சிறிதளவு

புதினா - சிறிதளவு

பூண்டு - 20 கிராம்

இஞ்சி - 20 கிராம்

பட்டை - 4

இலவங்கம் - 7

ஏலக்காய் - 5

அன்னாசி பூ - 4

பிரியாணி இலை - 1

மிளகுததுாள் - 1 ஸ்பூன்

மஞ்சள் துாள் - 1/4 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

நெய் - 4 ஸ்பூன்

உப்பு - சுவைக்கு ஏற்ப

தேங்காய் பால் - 200 மி.லி

பச்சை பட்டாணி - 200 கிராம்

செய்முறை:

தேங்காய் பால் தக்காளி சாதம் செய்ய முதலில் எடுத்து வைத்த அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் தக்காளியை மிக்ஸியில் போட்டு அடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

குக்கரை அடுப்பில் வைத்து அதில் அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பட்ட லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை அன்னாசி பூ ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் பிறகு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்ததாக அதில் இஞ்சி பூண்டு மற்றும் மீதமுள்ள கரம் மசாலாக்களை சேர்த்து நன்றாக அரைத்து, குக்கரில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இதில் மிளகாய் துாள், மஞ்சள் துாள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் கொத்தமல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தக்காளி விழுது ஆகியவற்றை சேர்க்கவும்.எண்ணெய் பிரிந்து வந்தவுடன் பச்சை பட்டாணியை அதில் சேர்க்கவும் இப்போது இதில் தேங்காய் பால் சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து ஒரு முறை கொதிக்க விடுங்கள் அடுத்ததாக அரிசியை சேர்க்கவும்.

பின் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். குக்கர் சூடு குறைந்ததும் மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் தேங்காய் பால் தக்காளி சாதம் ரெடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us