/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
உணவு
/
சுவையான 'மொறு மொறு வாழைக்காய் சமோசா'
/
சுவையான 'மொறு மொறு வாழைக்காய் சமோசா'
ADDED : மே 16, 2025 09:59 PM

சமோசா என்றால், யாருக்குத்தான் பிடிக்காது. இந்த பெயரை கேட்டால் வாயில் எச்சில் ஊறும். ரயில், ஹோட்டல், சாலையோர கடைகள், மார்க்கெட் என பல இடங்களில் சமோசா விற்கப்படும். பொதுவாக உருளைக்கிழங்கு, காய்கறி சமோசா சாப்பிட்டிருப்பீர்கள். வாழைக்காய் சமோசா சாப்பிட்டுள்ளீர்களா. சுவையோ சுவை.
செய்முறை
முதலில் வாழைக்காயை தோல் நீக்கி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் வாழைக்காய், பச்சை பட்டாணியை போட்டு வேக வைக்கவும்.
ஒரு அகலமான கிண்ணத்தில் கோதுமை மாவு, உப்பு, சோம்பு, நெய் போட்டு நன்றாக பிசையவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்திக்கான மாவு பதத்தை விட கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலி வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் வேக வைத்த வாழைக்காய், பட்டாணியை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதில் சீரகம், மஞ்சள் துாள், தனியா துாள், கரம் மசாலா, மிளகாய் பொடி போட்டு நன்றாக கலந்து பூரணம் தயாரிக்கவும்.
அதன்பின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி, பூரி போன்று தட்டி முக்கோண வடிவில் மடித்து, அதற்குள் வாழைக்காய் பூரணம் வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றவும். தயாரித்து வைத்துள்ள சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். மிதமான தீயில் இருக்க வேண்டும்.
இந்த சமோசா மாறுபட்ட சுவையுடன் இருக்கும். சிறியவர் முதல், பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் பொருத்தமாக இருக்கும்
. - நமது நிருபர் -