
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர், வரும் 7ம் தேதி துவங்குகிறது.
இந்ததொடரில் விலைவாசி உயர்வு, ஊழல் பிரச்னைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உள்ளிட்ட, பல்வேறு விவகாரங்களை எழுப்பி, அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அதை, எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு விளக்க, வரும் 7ம் தேதி மாலை, முதல்வர் கருணாநிதி தலைமையில், அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது. இதில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, அரசு தலைமை கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

