Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/அன்புள்ள மகன்

அன்புள்ள மகன்

அன்புள்ள மகன்


PUBLISHED ON : ஜூன் 07, 2026

Follow on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அசோக்குமார் எனும் நான்...

விருதுநகர் மாவட்டம் வடக்கு கரிசல்குளம் கிரா மத்தி ல், ஏழை குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தவர் என் அப்பா. சிறுவனாக கிழிந்த டிரவுசருடன் ஊரில் சுற்றிக் கொண்டிருந்தவரிடம், 'பள்ளிக்கு வந்தால் மதிய உணவுடன் புது ஆடை கிடைக்கும்' என்று சொல்லியிருக்கிறார் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்.

உணவுக்கும், புதிய ஆடைக்கும் ஆசைப்பட்டு பள்ளி சென்ற என் அப்பாவின் 'மாணவர் சேர்க்கை' படிவத்தில், 'இந்த 'கருப்பையா' பெயர் வேண்டாம்; உன்னை கிண்டல் பண்ணுவாங்க; 'தங்கையா'ன்னு வைச்சுக்கோ' என்று தலைமை ஆசிரியர் பெயர் மாற்றியிருக்கிறார்.

தனது உயர்கல்விக்குப் பின் திருவனந்தபுரத்தில் 'தணிக்கை யாளர்' பணி பெற்ற அப்பா, அங்கு தமிழ் சங்கம் நடத்தினார். 'தங்கையா கவிதைகள்' எனும் தலைப்பில் புத்தகம் எழு தினார். மதுரை வந்தபின் குடியிருப்போர் நலச்சங்க தலை வ ராகவும் இருந்தார்.

அப்பாவின் ஆசை

இப்படி சமூக வளர்ச்சிக்கு பங்களித்த என் அப்பாவிற்கு, தனது கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால், அதை பெரிதாக கண்டுகொள்ளாத நான், அண்ணா பல்கலையில் பொறியியல் முடித்து, 2008ல் அமெரிக்காவில் பணியாற்றச் சென்று விட்டேன்! 2019ல் நான் சென்னை திரும்பிய போது, அவர் மதுரையில் அம்மாவுடன் இருந்தார். 2020ல் 'கொரோனா'வால் மறைந்தார்.

அவரது இறுதி காரியங்களை முடித்து வந்த நான், அன்று அவருடைய அறைக்குள் நுழைந்தேன். அவர் பயன் படுத்திய பொருட்களை தொட்டுப் பார்த்தேன். அவரது பெட்டிக்குள், 'அறக்கட்டளை ஒன்று உருவாக்கி உயர்கல்விக்கு செல்லும் நம் கிராமத்து பிள்ளைகளுக்கு உதவ வேண்டும்' என்ற ஆசையைச் சொல்லும் ஒரு கு றிப்பு இருந்தது.

ஆசை நுாலகம் ஆனது

அந்த கிராமத்தில் இருந்து படித்து வாழ்வின் உயர்நிலைக்கு வருவதில் உள்ள சவாலை அனுபவித்தவர் என்றவகையில் அவரது உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. கரிசல் குளம் அரசு ஆதி திராவிடர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அவர் பெயரிலேயே நுாலகம் அமைக்க முடிவு செய்தேன்.

அரசிடம் அனுமதி பெற்று, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடப் பணிகளை முடித்தேன். சகோதரிகள் சித்ராவும், சுமித்ராவும் நுாலகத்திற்கான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் மர மேஜைகளுக்கான தொகையை பகிர்ந்து கொண்டனர்.

ஜூலை 27, 2023; அப்பாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்; மாவட்ட ஆட்சியர் 'ரிப்பன்' வெட்ட, அப்பாவின் நண்பர் வானமாமலை குத்துவிளக்கு ஏற்ற 'தங்கையா நினைவு நுாலகம்' திறக்கப்பட்டது.

அசோக்குமார் எனும் நான் பள்ளி செல்லும் என் மகன்கள் மனதில் இந்நிகழ்வுகளை அடிக்கடி விதையாய் துாவி வருகிறேன்; 'இவ்விதைகள் பெரும் மரமாகி இச்சமூ கத்திற்கு நல் கனிகளைத் தரும்' என்பது என் அழுத்தமான அசைக்க முடியா நம்பிக்கை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap