
'சிறந்த நடிகர்' அடையாளத்துடன் அரசியலிலும், 'கட்சி தலைவர்' அந்தஸ்துடன் சினிமாதுறையிலும் உலவும் கமல்ஹாசனிடம் பதில் கேட்கிறது தமிழகம்...
1. 'அரசியலுக்கு வருவீர்களா' என்றதும், 'நன்கு தெரிந்த வேலையை விட்டுவிட்டு தெரியாத வேலையை ஏன் பார்க்க வேண்டும்' எனக்கேட்ட தக் லைப் நாயகரே... தற்போது எந்த வேலையில் ஜொலித்திருப்பதாக நம்புகிறீர்?
2. 'தமிழகத்தில் ஜாதியை வளர்ப்பது இரு கழகங்கள்தான்' என 2021லும், 'எனது முக்கிய அரசியல் எதிரி ஜாதிதான்' என 2023லும் கர்ஜித்தவரே... 'நீ வளர்ப்பவனை கொல்ல வந்திருக்கிறேன்' என்று கூட்டணி நண்பரிடம் சொல்லியாயிற்றா?
3. 'யார் வேண்டுமானாலும் ஆராய்ச்சி மணியை அடித்துவிடலாம் என்பதில்லை; கன்றை இழந்த பசுதான் அடிக்க வேண்டும்' என்றவரே... பா.ஜ.,வை எதிர்த்து கூப்பாடு போடும் அனைத்தையும் 'பசுக்கள்' என்று கருதுகிறீரா?
4. 'அரசியல் சாக்கடையின் துப்புரவு தொழிலாளர்கள் நாங்கள்; சாக்கடையை சுத்தம் செய்ய வந்திருக்கிறோம்' என்று பெருமை பேசியவரே... 'தேர்தலில் தனித்து நின்றது - கூட்டணி சேர்ந்தது' - இவ்விரண்டில் எது துப்புரவு பணி?
5. 'காமராஜர், கலாம் போல் வர வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவன் நான்' என நிமிர்ந்து பேசியவரே... உம்மை வளர்த்தவர்களின் ஆசையை உமது அரசியல் செயல்பாடுகள் நிறைவேற்றி இருப்பதாக உணர்கிறீரா?
6. 'சாமி கும்பிடாதீர்கள் என நான் சொன்னால் ஏற்பீர்களா; அதனால், உங்களது நம்பிக்கையை என் மீது திணிக்காதீர்' என்று கொந்தளித்தவரே... 'மதத்தால் பா.ஜ., மக்களை பிரிக்கிறது' எனும் உமது நம்பிக்கைக்கு 'மைக்' எதற்கு?
7. 'டிவியை உடைத்து தி.மு.க.,வுடன் ஏன்...' என்றால், 'நாட்டுக்குத் தேவை' என்று எகிறுபவரே... 'தைரியமாக பேசிவிட்டால் உண்மை உங்கள் பக்கம் இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்களா' என்பது உமது கேள்விதானே?
7½'மானஸ்தன்' என்றால்...?