Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/கதை பேசும் சிலை

கதை பேசும் சிலை

கதை பேசும் சிலை


PUBLISHED ON : நவ 02, 2025

Follow on Google

PUBLISHED ON : நவ 02, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காண்பவரை மயக்கும் வண்டார் குழலி!

'இருக்குற மகராசி அள்ளி முடிஞ்சிக்கிறா' - 'அலங்கரித்துக்கொள்ள அழகான கருங் கூந்தல் வேண்டும்' என விரும்பும் பெண் களின் ஆசையையும், ஏக்கத்தையும் ஒருசேர கூறும் சொல் வழக்கு இது! இப்படி ஒரு ஏக்கம் விதைக்கும் அழகியாக கல்லில் ஓர் அரசி!

கடலுார் ஸ்ரீ முஷ்ணம் பூவராக பெருமாள் கோவில் பதினாறுகால் மண்டபத்து வட கிழக்கின் முதல் துாணில், கணவர் அச்சுதப்ப நாயக்கரின் இடப்புறமாய் நின்று சுவாமியை சேவித்துக் கொண்டிருக்கிறாள் இவள்!

கைகொள்ளா கார்கூந்தலை மூன்றாய் பிரித்து, அவற்றை கழுத்துக்கு கீழிருந்து அடிவரை பின்னி, குஞ்சம் மாட்டி, பட மெடுத்தாடும் அரவமாய் அலங்கரித்திருக்கிறாள். இப்படியான சடை பின்னலை, 'பனிச்சை' என்கிறது சங்க இலக்கியம்; இதை கல்லில் நெய்திருக்கிறது சிற்பியின் கைவண்ணம்!

'இராக்குடி' வகையறா தலை அணிகலன் களுடன் கூடிய கன்னச்சரமும், அழகிய பூ வேலைப்பாடுகளுடன் கூடிய பொன், வெள்ளி தகடுகளால் ஆன கொண்டை திருகும், குஞ்சமும் அலங்காரத்திற்கு அழகு கூட்டியிருக்கின்றன. மெல்லிடையில் ஒட்டியிருக்கிறது ஒட்டியாணம் போன்ற கடிசூத்திரம்!

'மன்னன், அரசிகள் கம்பீரத்தோடு அணிகலன் பெயர்களையும் அறியும் வண்ணம், காலத்தால் அரிக்க முடியாதபடி துல்லியமாய் செதுக்கியிருக்கும் நாயக்கர் கால சிற்பிகள் போற்றுதலுக்கு உரியவர்கள்' என்கிறார் கோவிலின் தீவிர பக்தரான லட்சுமி வராகன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap