தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/செல்லமே/பிறந்த நாள் கொண்டாட சிறந்ததா ஒரு ஐடியா

பிறந்த நாள் கொண்டாட சிறந்ததா ஒரு ஐடியா

பிறந்த நாள் கொண்டாட சிறந்ததா ஒரு ஐடியா


ADDED : செப் 29, 2024 09:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2024 09:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்கள் வாழ்நாள் முழுக்க, வசந்தத்தை மட்டுமே துாவி செல்லும் பிரியமானவர்களின் பிறந்தநாளை, செல்லப்பிராணிகளோடு கொஞ்சியபடி, வித்தியாசமான சூழலில் கொண்டாடும் அனுபவத்தை வழங்குகிறது, கோவை, காளப்பட்டி ரோட்டில் உள்ள பவ் பவ் பிளிஷ் ரெஸ்டாரன்ட்'.

இது பெட் பிரண்ட்லி ரெஸ்டாரன்ட் என்பதால், வழக்கமாக சாப்பிட வருவோர், இங்குள்ள பப்பிகளுடன் நேரம் செலவிட அனுமதிக்கப்படுகிறது. அவ்வப்போது, பெட் பிரண்ட்லி ஈவன்ட் நடத்தப்படுகிறது.

தற்போது ஸ்பெஷல் ஈவன்ட்டாக, செல்லப்பிராணிகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளது. 10க்கும் மேற்பட்டவர்கள், இங்கு பங்கேற்று பிறந்தநாள் கொண்டாடலாம். இதற்கான ப்ரீ- செட் 'டெக்கரேஷன்' எப்படி இருக்க வேண்டுமென, நீங்கள் தேர்வு செய்தால் போதும். அனைத்து ஏற்பாடுகளும், உரிய நேரத்தில், தயார் செய்து வைத்துவிடுவர். கொள்ளை அழகுடன், கொஞ்சியபடி ஒரு பப்பி வந்து வாழ்த்து சொல்லும்.

கேக் வெட்டும் போது, 'ஸ்பார்க்கிள் கன்' வழியாக, நட்சத்திரங்கள் அருவியாய் கொட்ட, வேறு எதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும் என முணுமுணுத்தபடி, பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் அன்புக்குரியவரை, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்து விடலாம். இந்த ஆபர், அக்டோபர் மாதம் வரை மட்டுமே இருப்பதால், முன்பதிவுக்கு, 85998 69964 என்ற எண்ணில் அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us