ADDED : ஏப் 20, 2024 10:47 AM

'எப்போதும் பரபரப்பா இருக்குற கோவை காளப்பட்டி ரோட்டுல ஒரு தெருநாய் அடிபட்டு, 10 மணி நேரத்துக்கு மேலயும் யாரும் கவனிக்கல. எங்களுக்கு தகவல் தெரிஞ்சதும் உடனே ஓடினோம். அடிபட்டு ரொம்ப நேரம் ஆகிட்டதால ஒரு கால் செயலிழந்துடுச்சு. இப்போ, 'மூணு கால் முருகன்'ங்கற நிக் நேமோட, எங்க வீட்டில ஒருத்தனாகிட்டான்...' என்கிறார், 'யாமி பவுண்டேஷன்' தலைவரும் விலங்குகள் நல ஆர்வலருமான பிருந்தா.
தெருநாய் மீட்பில் ஈடுபட்டது எப்படி?
வலி அதிகமாகி, கத்தி துடிச்சிக்கிட்டு இருந்துச்சு. ஒரு அம்மாவா அதுக்கு மேல என்னால வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியலை. உடனே கையில எடுத்துட்டு பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டல் போனேன். ஒரு வாரத்துக்கு, அடிபட்ட கால்ல மருந்து போடணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. புண் ஆறுனதும், அதோட இடத்துலயே போய் விட்டுட்டேன். இது நடந்து கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கும் மேல இருக்கும்.
எங்கேயாவது தெருநாய் அடிபட்டா, ட்ரீட்மென்ட் கொடுத்து அதோட இடத்துல விடுறது, இப்பவும் தொடருது. என்னை மாதிரியே, தெருநாய்கள் மேலயும் கரிசனம் காட்டுறவங்க கைக்கோர்த்தாங்க. இப்படித்தான், 'யாமி பவுண்டேஷன்' உருவாச்சு. இதோட உறுப்பினர்கள், 400 பேர் இருக்காங்க. இவங்களோட ஆதரவுல மட்டும் தான், அடிபட்ட தெருநாய்களை மீட்டு, ட்ரீட்மென்ட் கொடுக்குறதை, முழுநேர வேலையா மாத்திகிட்டோம்.
தினமும் உங்க உதவி கோரப்
படுகிறதா?
சில நாய்களுக்கு தொடர்ந்து ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டியிருக்கும்... தெருவுல திரும்பவும் விட முடியாத நிலைமையில இருக்கும் நாய்களுக்காக, தனியா ஒரு வாடகை வீடு எடுத்துருக்கோம். இவங்களுக்கு சாப்பாடு கொடுக்கறது, மருந்து போடுறதுன்னு, மொத்தம் 10 பேர் வேலை பாக்குறாங்க. இவங்களுக்கு சம்பளம், வண்டிக்கு டீசல் செலவுன்னு மாசம், 3.5 லட்சம் ரூபாய் செலவாகுது. பட்ஜெட் போட்டு, செலவு பாக்க ஆரம்பிச்சா, தெருநாய்கள யார்தாங்க காப்பாத்துறது.
மக்களோட ரெஸ்பான்ஸ்
எப்படி?
உங்களோட எதிர்பார்ப்பு?
