ADDED : ஜன 27, 2024 09:27 AM

ஆர்வம், பொழுதுபோக்கு, பாதுகாப்பு, மகிழ்ச்சி, மன அழுத்தம் குறைக்க என, பல்வேறு காரணங்களுக்காக 'பெட் அனிமல்' வளர்க்கிறோம். 'பெட் டாக்' தேர்வில் குழந்தைகள் விருப்பத்திற்காக பொமேரியன், கிட்ஜூ, பீகில், பிரென்ச் புல் டாக், பக் வகைகள் உண்டு. இவை, வீட்டுக்குள் நம்முடன் அன்பாகவும், அறிவுடனும் பழகி விளையாடும் இயல்புடையவை.பெண்கள் பெரும்பாலும் லேபர் ரெட்ரீவர், கோல்டன் ரெட்ரீவர் ரகங்களை தேர்வு செய்கின்றனர்.
வீடுகளில் ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர் மேன், ராட் வில்லர், ஹக்கா ரகங்கள் வளர்க்கப்படுகின்றன. வேட்டை, பாதுகாப்புக்காகவும், நம்மூரு நாட்டு ரகங்களை பாதுகாக்க, ராஜபாளையம், கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை இனங்களை தேர்வு செய்கின்றனர். 'பெட்'டுக்கு உப்பு, சர்க்கரை, மசாலா பொருட்கள் இல்லாத உணவுகள் உகந்தவை.
நாய்கள் குட்டி போட்ட, 30 நாட்களில் தாயிடமிருந்து பிரிக்கலாம். குட்டி போட்ட 25 முதல் 30 நாட்களில் பப்பி தடுப்பூசி அவசியம்.45வது நாள் முதல் தடுப்பூசி; 21 நாட்கள் இடைவெளியில் 3 தடுப்பூசிகள் போட வேண்டும்; 3 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து தர வேண்டும்.
வாரம் ஒரு முறை அவற்றுக்கான பிரத்யேக சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்க வைக்கணும். காதுகளை முறையாக சுத்தம் செய்துவிட வேண்டும். சாலை, தெருவில்சென்றுவரும்போது கிரிமி தொற்று பாதிப்பு ஏற்பட்டு காலில் புண் உண்டாகவும் வாய்ப்புள்ளது. குளியலின்போது எலுமிச்சை சாற்றை லேசாக தடவி விட்டு கழுவிவிட வேண்டும்.
டாக்டர் அசோக்குமார், ஆர்.ஆர்., பெட் கிளினிக், உடுமலை.

